டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தமிழக மறைகள் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கட்டுமானப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.