மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற ராஜகுமாரியை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன பிறகு முன்பின் தெரியாத சில ஆண்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளனர்.

இதனை தனது மனைவியிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மனைவி கணவரின் பிறப்புறுப்பை கடித்து குதறியுள்ளார்.
இதையடுத்து ரகுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர். இந்நிலையில் தனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.