வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவான கஸ்டடி திரைப்படம் கடந்த வாரம் 12 ம் தேதி வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் 10 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது. அதே போல் வெளிநாடுகளிலும் இப்படம் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த வசூலையும் பெறவில்லை என கூறப்படுகிறது.