இனி வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் வாங்கி கொள்ளலாம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் வழியே மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் QR கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது 8300086000 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ டிக்கெட் பெறும் வசதி பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட எண்ணிற்கு நீங்கள் “HI” என மெசேஜ் செய்தால், உங்களுக்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரிப்ளை வரும். அதில் உங்களுடைய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

அடுத்தபடியாக உங்களுடைய டிக்கெட்டை புக் செய்து, உங்கள் அருகில் இருக்கும் மெட்ரோ ஸ்டேஷனையோ அல்லது உங்களுக்கு விருப்பமுள்ள நிலையத்தையோ நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மொத்தம் 6 டிக்கெட் வரை எடுத்துக்கொள்ளலாம்.இதனை நீங்கள் UPI அல்லது டெபிட் கார்ட் மூலம் கட்டணத்தை செலுத்தி, டிக்கெட்டை எடுக்கலாம்.

RELATED ARTICLES

Recent News