2011-ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி, மஹத், ஜெயபிரகாஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு ‘கஸ்டடி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மங்காத்தா-2 படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “அதை அஜித் சார்தான் சொல்ல வேண்டும்” என்றார். மேலும் பேசியவர் “முதல் பாகத்தை முடித்த உடனேயே, இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ஆலோசனை செய்தோம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை சிறப்பாக எடுக்க விரும்புகிறோம். இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.