சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி வெளியாகியது.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரத்தில் ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டாலும், போதிய வரவேற்பு கிடைக்காமல் போனதால் படம் தடை செய்யப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் பாஜக ஆளும் மாநிலங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து ஆதரவு தெரிவித்து வருகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தற்போது வரை 68.86 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.