மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இனி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

இவரது திடீர் அறிவிப்பை சற்றும் எதிர்பாராத என்சிபி கட்சியினர் முடிவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.