நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

சரத்பாபுவுக்கு உடல் நடல்குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.