“First நிர்வாண Photo.. Next தான் Workout” – அழகான உடல்வாகு பெற பிரச்சனையில் சிக்கிய பெண்கள்!

கட்டுடல் பெற வேண்டும் என்று ஆண்களும், பெண்களும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக, Youtube, Facebook, Insta என்று பல்வேறு சமூக வலைதளங்களில், ஃபிட்னஸ் டிப்ஸ் தருபவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஃபிட்னஸ் ஃபிரீக் என்ற இன்ஸ்டா பக்கத்தை, சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அந்த பக்கம் பெண்களுக்கான டிப்ஸ்களை வழங்கி வருவதால், அதிகப்படியான பெண்கள் தான், அந்த பக்கத்தின் பின்தொடர்பவர்களா இருந்து வந்தனர். இந்நிலையில், அந்த பக்கத்தை நிர்வகித்து வரும் பெண், அழகான உடல்வாகு பெற வேண்டும் என்றால், உங்களது நிர்வான புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள், உங்கள் உடலுக்கு ஏற்றவாறு, நான் உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய பெண்கள் சிலர், அந்த இன்ஸ்டா கணக்கிற்கு, தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அனுப்பிய சில மணி நேரங்களில், வேறொரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

அதில், “உங்களுடைய நிர்வாண புகைப்படம் என்னிடம் உள்ளது. இப்போது நீங்கள் நிர்வாணமாக வீடியோ காலில் வரவேண்டும். வரவில்லை என்றால், உங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், தனக்கு தேவையான பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்களிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சிலர், சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். அதில், அந்த இன்ஸ்டா கணக்கை நடத்தி வந்தது பெண் அல்ல என்றும், அது ஒரு ஆண் என்பதும்.. அவர் பெயர் திவாகர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News