தமிழகத்தில் 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் 2019-ல் 78,000 ஆக இருந்த நிலையில் 2023-ல் 83,000 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் காணப்படுகிறது.

ஒரு லட்சம் ஆண்களில் 6.5 பேருக்கு வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை கூறுகிறது. பெண்களை பொறுத்தவரை ஒரு லட்சம் பேரில் 27 பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

2001 வரை தமிழகத்தில் பெண்களை அதிகம் தாக்கிய புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்து வந்த நிலையில் தற்போது மார்பக புற்றுநோய் முதலிடத்தை பிடித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News