இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா பிரீத்தி, மன்சூர் அலி கான், கே எஸ் ரவிக்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’80’ஸ் பில்டப்’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
படம் 80களில் நடப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்துக்கும் 80களின் பின்னணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வழக்கமாக சந்தானம் படத்தில் வரும் காமெடி காட்சிகளாவது சிரிப்பது போல இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
படம் நேரடியாக கதைக்குள் செல்லாமல் தேவைற்ற காட்சிகளால் நிரப்பப்பட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகே மெயின் கதைக்குள்ளேயே படம் நுழைகிறது. சந்தானம் வழக்கமாக இதுவரை என்ன செய்தாரா அதையேதான் இதிலும் செய்திருக்கிறார்.
சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்கள் செய்யும் காமெடிகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் விறுவிறுப்பும் படத்தில் ஒன்றும் இல்லை.
சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனை பிறகு வெளியான ‘கிக்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த வரிசையில் ’80’ஸ் பில்டப்’ திரைப்படமும் இணைந்துள்ளது.