கேரளாவில் ஜோஷ் என்ற 8 மாத குழந்தை காய்ச்சல் காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் குழந்தை அசாதாரணமாக மூச்சு விடுவதைப் பார்த்து குழந்தையின் பெற்றோர் சத்தம் எழுப்பி உள்ளனர். அதன் பிறகு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை அளித்து உள்ளனர். இருந்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பால் உயிரிழந்தாக அறிவித்தனர்.

குழந்தைக்கு அதிக அளவு மருந்தை கொடுத்த பிறகு குழந்தையின் உடல்நிலை சரியாக கண்காணிக்கப்படாததால் மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் குழந்தைகள் நல மருத்துவமனை மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.