டெல்லியில் புதிய நாடாளுமன்ற நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த விழாவை நினைவு கூரும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் 75 ரூபாய் நாணயத்தை வெளியிடவுள்ளது. இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும் மறுபுறம் நாடாளுமன்ற வளாகத்தின் படமும் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.