இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இப்பகுதியில் இன்று நண்பகல் சுமார் 12.15 மணியளவில் மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.