துருக்கி, சிரியா எல்லையில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்களை பற்றி பார்ப்போம்..
ஜனவரி 26, 2001ல் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.
டிசம்பர் 26, 2003 ல் தென்கிழக்கு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 ஆயிரம் பேர் பலியாகினர். ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.
டிசம்பர் 26, 2004 ல் இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,30,000 பேரை பலி வாங்கியது.
அக்டோபர் 8, 2005 ம் ஆண்டு பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.
மே 12, 2008 ம் ஆண்டு சீனாவின் கிழக்கு சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,500 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது.
ஜனவரி 12, 2010 ல் ஹைதி தீவில் 7.0 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3,16,000 பேர் பலியாகினர்.