கடந்த ஜூன் 9 ஆம் தேதி அறிமுக இயக்குநர் விக்னேஷ்ராஜா,நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் போர்தொழில்.இப்படமானது, மக்களிடையே நல்ல விமர்சனங்களையும்,பாராட்டுகளையும் பெற்று வருகிறது .

இந்நிலையில்,இப்படத்தின் வெற்றியை போர்த்தொழில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.மேலும் , இன்றளவில் இப்படமானது உலகளவில் 50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தெரிவிக்கும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே , இதுசார்ந்த புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகி வருகிறது.