பெண்களுக்கு அடித்த 5 லட்சம் ஜாக்பாட் ! அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்!

பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை வழங்கும் திட்டம் உத்தராகண்ட் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல திட்டங்கள் இருக்கிறது . அதில் பெண்களை லட்சாதிபதியாக்கும் ஒரு சிறப்பு திட்டம்தான் லக்பதி திட்டம்.இது உத்தராகண்ட் மாநில அரசால் பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறமுடியும்.

ஆனால் இதில் பயன்பெற அம்மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். பெண்களை சுய உதவி குழுக்களுடன் இணைக்க வேண்டும்.இத்திட்டமானது பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தப்படுவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்களுடைய தொழிலை மேம்படுத்த முடியும்.

பெண்களுக்கு வட்டி இல்லாமல் 5 லட்ச ரூபாய் கடன் வழங்கும் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு நிலவிவரும் நிலையில், இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் நலன் கருதி இத்திட்டத்தை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு
வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News