தமிழ்நாடு அரசு கூடுதல் எஸ்.பி.க்கள் 4 பேரை எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தியுள்ளது. அதன்படி, திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துணை ஆணையராகவும், விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி. ரமேஷ்பாபு சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் ஏ.எஸ்.பி. மலைசாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ்.பி.யாகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி.செல்லபாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.