இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே.அச்சர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 3 BHK. சரத்குமார் தேவையானி காம்போ எப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சூர்யவம்சம். இதேப்போல் இப்படமும் நல்ல ஹிட் கொடுக்குமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்க இன்று திரையில் வெளியானது.
இப்படத்தின் கதைக்களம் என்ன..? படம் ஹிட் கொடுத்துள்ளதா..? அல்லது ப்ளாஃப் ஆகி விட்டதா படத்தின் நிறை குறைகள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு குறிப்பாக சென்னை வாசிகளுக்கு. அப்படி தான் நம்ப வாசுதேவன் (சரத்குமார்) குடும்பத்திற்கும். இவருடைய கனவு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும்., மறுபக்கம் பிள்ளைகளை படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட வேண்டுமென்ற ஆசையில் கடுமையாக உழைக்கும் ஒரு சராசரி குடும்ப தந்தை.

அப்பா பேச்சை எந்த பையன் தான் இளம் வயசுல கேட்டு இருக்காங்க. அப்படி தான் நம்ப ஹீரோவும், 12ம் வகுப்பிலேயே படிப்பு ஏறாமல் பொதுத்தேர்வில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். சரி நம்ப பையன் இதுக்கு அப்புறம் படிச்சு., நல்ல வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்துப்பான் நினைக்குறாங்க சரத்குமாரும் தேவையானியும். அதுனால ஹீரோவுக்காக 15 லட்சம் கொடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுறாங்க.

பல வருடங்களாக சேர்த்து வைத்த மொத்த பணமும் ஹீரோவின் படிப்பிற்காக கொடுக்க., 25 லட்சம் கொடுத்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என வீட்டு புரோக்கர் கூறுகிறார். இதனால் ஷாக் ஆன சரத்குமார் தனது தம்பியிடம் சென்று கடன் கேட்கிறார்.. ஆனால் அவரது தம்பி உன்னை நம்பி எப்படி பணம் தருவது என கேட்டு அசிங்க படுத்தி விடுகிறார்.

இதனால் மனமுடைந்த சரத்குமார் மகன் கேம்பஸ் இன்டெர்வியுவில் தேர்வாகி விட்டால் வேலை கிடைத்து விடும். அப்புறம் சொந்த வீடு வாங்கிடலாம் என்ற கனவோடு இருக்க அப்பவும் ஏமாற்றம் தரும் விதமாக சித்தாத்திற்கு வேலை கிடைக்கவில்லை.

இதையெல்லாம் பார்த்த சரத்குமார் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி ஆகிறார். பின்னர் மருத்துவ செலவு., மகளின் திருமணம் என மொத்தம் 35 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது. ராட்டினம் சுற்றி ஆரம்ப இடத்திற்கே வருவது போல மீண்டும் மொத்த பணமும் செலவாக, என்ன செய்வது என்று தெரியமால் நிற்கிறார் சித்தார்த்த.

தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் ஹீரோவிற்கு படிப்பு வராததால் உதவ முடியவில்லை., இதனால் மனமுடைந்த ஹீரோ அவர் வழியில் சென்று பணம் சேர்க்க ஆரம்பிக்கிறார். கடையில் அவர்கள் சொந்த வீடு கட்டினார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் ஹிட் :
சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், யோகிபாபு, சைத்ரா ஜே. அச்சர் நடிப்பு மிக அருமை., அனைவரின் அந்த யதார்த்தமான நடிப்பு., படம் பார்ப்போரை ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழ்வோரை போல நம்மை பயணிக்க வைக்கும்.
படத்தின் இரண்டாவது ப்ளஸ்., ஒரு நடத்தர குடும்பத்தின் கனவை அழகாக கூறுவது., இந்த ஜெனரேஷன் பசங்க இந்த படத்தை பார்த்தால் ஒரு தந்தையின் கஷ்டம் புரியும் என சொல்லலாம்.
அதேபோல் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் பெற்றோர்களும்., பெற்றோர்களுக்காக வாழும் பிள்ளைகள் என அழகாக காட்டியிருக்காங்க.

படித்தால் மட்டுமே மதிப்பு மரியாதை., படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் உறவினர்கள் முன் கிடைக்கும் அவ பெயர் மற்றும் அவமானம், சொந்த வீடு வாங்க முடியும் என்ற நம்பிக்கை என அனைத்தையும் இயக்குனர் அழகாக உணர்த்தியுள்ளார்.
நடிகர் யோகிபாபுவின் காமெடிக்கு பஞ்சமேயில்லை.
பூம்பர் சொல்லிடுவாங்க :
ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வையும், எதிர்கால வாழ்க்கையை பற்றி இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அழகாக சொல்லி இருந்தாலும் படம் இன்றைய தலைமுறையினருக்கு பிடித்து இருக்க வேண்டும். காரணம் நல்லதை சொன்னா தான் இந்த தலமுறையினர் பூம்பர் என சொல்லுகிறார்களே..
படத்தின் மைனஸ் :
எதுவும் சொல்வதற்கு இல்லை.