காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள தென்புஷ்கரணி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 34 வயதாகும் இவருக்கு, புஷ்பா என்ற மனைவி உள்ளார். மது அருந்தும் பழக்கம் கொண்ட புஷ்பாவுக்கு, பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாம். கணவர் வேலைக்கு வெளியே சென்றுவிட்டால், அவர்களை வீட்டிற்கு அழைத்து விடுவாராம்.
இவ்வாறு இருக்க, யோகி என்பவருடன், புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், யோகியை தீவிரமாக புஷ்பா காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே, யோகியின் வீட்டில், அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தனர்.
இதையடுத்து, புஷ்பாவிடம் பழகுவதை அவர் தவிர்த்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று, யோகியும், புஷ்பாவும் அவரது வீட்டில் ஒன்றாக வழக்கம் போல் சந்தித்துள்ளனர். அப்போது, இருவரும் மது அருந்தியுள்ளனர். கடுமையாக மது அருந்திய புஷ்பா, “என்னை விட்டுட்டு நீ போகக் கூடாது.. வேற யாரையும் திருமணம் செய்யக் கூடாது” என்று புலம்பித் தள்ளியுள்ளார்.
இதனால் கடுப்பான யோகி, காதலியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே புஷ்பா உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலை போல் செட்-அப் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
ஆனால், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அனைத்தும் அம்பலமானது. இதையடுத்து, யோகியை காவல்துறையினர், தேடி வந்தனர். இதனை அறிந்த அவர், தானாகவே காவல்துறையில் சரண் அடைந்தார்.
இந்த கொலையில், இவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாரேனும் இந்த வழக்கில் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.