சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 310 வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பூலித்தேவன் மக்கள் நல இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதில் பூலித்தேவரின் நிறுவன தலைவர் செல்வம் தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும் மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது நகர செயலாளர் விஜய பாண்டியன், மதிய ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர்.