காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய காதலன் உதவி. 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது.
மதுரை மாவட்டம் மேலூர் வல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெற்குதெரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தீபன்ராஜ் (25) என்பவனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தீபன்ராஜும், அப்பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தீபன்ராஜின் நண்பர்களான மதன் மற்றும் சுகுமாறன் ஆகியோர் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அப்பெண் தனக்கு நேர்ந்த கொடூரங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பேரில் தீபன்ராஜ், மதன் மற்றும் சுகுமாறன் ஆகியோரை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் காஞ்சனாதேவி தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவு படி மேலூர் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்…