சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் அவா்களுக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காரில் எடுத்து வந்து வியாபாரிகளுக்கு கொடுப்பதாகவும் அத்தகவல் கிடைத்துள்ளது.இத்தகவலின் அடிப்படையில் ASP தனிப்படை காவல்துறையினர் நகரில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது ஷிப்ட் கார் ஒன்றில் பதினெட்டு மூடைகள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை நான்கு பேர் எடுத்து எடுத்துவந்தது தெரியவந்தது.இதனால், அவர்களை மடக்கிப் பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 202 கிலோ கணேஷ் பான் மசாலா குட்கா கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தவுலத் நிசார்,கணேஷ்,திருமூர்த்தி, முகமது அலி ஜின்னா, ஆகிய நான்கு பேரை கைது செய்தனா் .பின்னா், தெற்கு காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது