மரங்களை வெட்டுதல், கனிம வளங்களை சுரண்டுதல் போன்றவற்றின் காரணமாக, காலநிலை மாற்றம் ஏற்படுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இவ்வாறு செய்தால், புவி வெப்பம் அடைந்து, கடல் நீர் மட்டம் உயர்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, ஐரோப்பிய யூனியனின், காலநிலை மாற்ற சேவை என்ற அமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உலக வரலாற்றிலேயே, 2023-ஆம் ஆண்டில் தான், அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை, 0.52 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு, சராசரி அளவை விட மிகவும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 0.93 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இது சராசரி அளவை விட மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்தில் தான், அதிக அளவிலான வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். காலநிலை மாற்ற சேவை அமைப்பின் உதவி இயக்குநரான சமந்தா பர்கீஸ், இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, அதிக வெப்பம் கொண்ட மாதம் என்ற மோசமான முதலிடத்தை, 2023-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சனை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகளின் சபையிடம், அவர் வலியுறுத்தியுள்ளார்.