பொள்ளாச்சி அருகே 15 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த மாணவியின் தந்தை மற்றும் காதலனை கைது செய்து சிறையில் அடைத்த மகளிர் காவல் நிலைய போலீசார்.,
பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஒரு தம்பதியனரின் மகளான 15 வயது மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவிக்கு அவ்வப்போது காதலனும் மாணவியின் தந்தையும் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தன் தாயிடம் கூறியுள்ளார் அதிர்ச்சியடைந்த
மாணவியின் தாய் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவியின் தந்தை மற்றும் காதலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்