அறையில் படிக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 10-ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் வீட்டு அறையில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் குடும்பத்தினர் ஓடி வந்தனர். அறைக்குள் சென்று பார்த்தபோது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். காயமடைந்த மாணவியை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவி இறந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News