கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி, “பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 7-ல் தொடங்கி பிப்ரவரி 14-ல் முடிவடையும். பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி பிப்ரவரி 21-ல் நிறைடவையும், 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவுபெறும்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதியும் முடிவடைகிறது.
அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 9 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 19 ஆம் தேதியும் வெளியாகும்” என்று அமைச்சர் அறிவித்தார்.