நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ திரைப்படம், புலனாய்வு திரில்லர் திரைப்படம், ஜூன் 13 முதல் Tentkotta OTT இல் வெளியாக உள்ளது.
இயக்குனர் சுந்தர் சி -யின் உதவி இயக்குனர் லோக்கேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் Leven. இதில் ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கதையின் சுருக்கம் :
மர்ம நபர் ஒருவரால்., சென்னையில் பலர் ஒரே மாதிரியாக கொல்லப்படுகின்றனர். இதைப்பற்றிய விசாரணையை அதிகாரி (ஷஷாங்) தொடங்கிய சில மணி நேரத்திலேயே விபத்தில் சிக்கிக் கொள்கிறார். எனவே அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே “லெவன்” படத்தின் கதை..
படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து
பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத Climax காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படம் Leven. பல விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளியான சில மணி நேரத்திலேயே இப்படத்தை பல லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் இப்படம் டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் கால் பதிக்கும் என்று நம்பப்படுகிறது.. .