தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும்., தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான “விஜய்” இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜனநாயகன் படக்குழுவினர் நள்ளிரவு 12 மணி அளவில் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் ரோர் என்ற வீடியோவை வெளியிட்டனர். இப்படம் அவரது கடைசி படம் என்பதால் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மற்றும் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில்., படத்தின் பர்ஸ்ட் ரோர் வீடியோ நேற்று வெளியானது. குறிப்பாக அதில், ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக அல்ல, மக்களுக்காகவே உருவாகிறார்..” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.