நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல யு டுயூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், அப்பாவை அப்பா என்றும், அம்மாவை அம்மா என்றும் தமிழில் தான் அழைக்க வேண்டும் என தனது மகளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதற்கு இப்படி என்று கேள்வி கேட்டதற்கு, தமிழை வளர்க்கும் சிறு முயற்சி என்று அவர் பதில் அளித்தார்.
இவ்வாறு இருக்க, பிரின்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயனிடம், உங்கள் படங்களின் தலைப்பு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே இருப்பதாக கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.. படத்தை Promote செய்ய இதுபோன்ற டைட்டில்கள் தேவை என்று தெரிவித்தார்.
மக்களை கவரும் வகையிலான டைட்டில்கள் தமிழிலேயே பல இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் மாற்றி மாற்றி பேசுவதாகவும், நெட்டிசன்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். “பிறமொழி ரசிகர்களை கவர்வதற்கு இவ்வாறு டைட்டில்களை வைக்கின்றனர்” என்றும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.