அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்..!!

தமிழகத்தில்  கடந்த  சில  தினங்களாக  ஏற்றம்  இறக்கத்தை  சந்தித்து   வந்த தங்கம் விலை  இன்று அதிரடியாக  குறைந்துள்ளது..  இதனால்  பொதுமக்கள்  உற்சாகம்  அடைந்துள்ளனர்.

தமிழகத்தில்  24 காரட்  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 114 ரூபாய்  குறைந்து 10 ஆயிரத்து 37 ரூபாய்க்கும்., சவரனுக்கு  912 ரூபாய்  குறைந்து  80 ஆயிரத்து 296 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல்  22 காரட்    ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய்  குறைந்து  9 ஆயிரத்து 200 ரூபாய்க்கும்., சவரனுக்கு 840 ரூபாய்  குறைந்து 73 ஆயிரத்து  600 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்  18 காரட்  ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு  85 ரூபாய்  குறைந்து 7 ஆயிரத்து 575 ரூபாய்க்கும்., சவரனுக்கு  680 ரூபாய்  குறைந்து  60 ஆயிரத்து 600 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  விலை  கிராமுக்கு  10 காசுகள்  உயர்ந்து  120 ரூபாய்க்கும்., ஒரு  கிலோ வெள்ளி விலை  100  ரூபாய்  அதிகரித்து  1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News