எலன் மஸ்கிற்கு Thug Life கொடுத்த சிபி சத்யராஜ்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் எலன் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கியுள்ள எலன் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.

உயர் பதவிகளில் இருந்த பல்வேறு பணியாளர்களை, எலன் மஸ்க் நீக்கி வருகிறார். இதுமட்டுமின்றி, சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பயனர்களின் கணக்குகளுக்கு, அவர்களின் பெயர்களுக்கு பக்கத்தில் ப்ளு டிக் இடம்பெற்றிருக்கும். முன்பு, இந்த ப்ளு டிக் பெறுவதற்கு பணம் எதுவும் தர வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

ஆனால், தற்போது, இந்த ப்ளு டிக் பெற்றுள்ளவர்கள், ட்விட்டர் நிறுவனத்திற்கு, 8 டாலர்கள் பணம் செலுத்து வேண்டும். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எலன் மஸ்க், புகார் அளிப்பவர்கள் தொடர்ந்து புகார் அளியுங்கள்.

ஆனால், அதன் கட்டணம் 8 டாலர் தான் என்று கூறியிருந்தார். இந்த பதிவை ரீ ட்வீட் செய்திருந்த நடிகர் சிபி சத்யராஜ், உங்களது G Pay நம்பரை அனுப்புங்கள்.. பணத்தை அதில் நாங்கள் செலுத்துகிறோம் என்று தக் லைஃப் பதிலை வழங்கியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News