கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினருமான கவின்ராஜ் வீட்டில் விசாரணை மேற்கொண்ட போதுஅவர் வீட்டில் கவின் இல்லாததால் அவர் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு சிபிசிஐடி போலீஸ்சார் திரும்பி சென்றனர்
சொத்து மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நெருக்கமான நபர்கள் வீட்டில் தொடர் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.