கடந்த 1995ம் ஆண்டு தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவையானி. இவரது முதல் படம் ஹிட் கொடுக்க வில்லை என்றாலும்., இரண்டாவது படமான “காதல் கோட்டை” செம ஹிட் ஆனது. மேலும் பல்வேறு பட வாய்ப்புகளும் இவருக்கு வரிசை கட்டி நின்றது. அதன் பின்னர் 90ஸ் களின் கனவு கன்னியாக தேவையானி வளம் வந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் கொடி கட்ட பறந்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
பின்னர் பிரபல இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நடிகை தேவையானி நேற்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தனது பிறந்தநாள் கொண்டாட்டமாக தேவையானி தனது சகோதரரும் நடிகருமான நகுலுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
இந்த பார்ட்டி ஏற்பாடுகளை நடிகர் நகுல் ஏற்பாடு செய்திருந்த நிலையில்., திரை பிரபலங்கள் பலர் அதில் பங்கேற்றுள்ளனர்..