பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய படங்களாகும்.
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முரட்டுக்காளை. இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினிக்கு வில்லனாக இப்படத்தில் ஜெய் ஷங்கர் நடித்திருந்தார். முதலில் இந்த வாய்ப்பு விஜயகாந்திற்கு தான் கிடைத்தது. ஆனால் விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் வில்லனாக நடிக்கவேண்டாம் என கூறியுள்ளார்.
என்ன இருந்தாலும் நீ ஒரு ஹீரோ, மக்கள் மத்தியில் எப்போதும் ஹீரோவாகவே தான் இருக்க வேண்டும் என கூறியதால் விஜயகாந்த் முரட்டுக்காளை படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.