ட்விட்டரில் விடியோ மற்றும் ஆடியோ கால் வசதி வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ட்விட்டரின் பிரபல லோகோவான நீலக்குருவிக்கு பதிலாக கருப்பு நிற பின்னணியில் ‘எக்ஸ்'(X) என்று லோகோவை மாற்றினார்.
இதையடுத்து ட்விட்டரில் விடியோ மற்றும் ஆடியோ கால் வசதி வருகிறது. இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் செயல்படும். இதற்கு போன் நம்பர் எதுவும் தேவையில்லை. உலகளாவிய பயனுள்ள முகவரிகளின் தொகுப்புதான் ட்விட்டர். அவை தனித்துவமானது’ என்று பதிவிட்டுள்ளார்.