சென்னை பழவந்தாங்கல் அரசு பள்ளியில் படிக்கும் 11-வது படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனே தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
உடனே தலைமை ஆசிரியர் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வதும் அவரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மாணவனின் பெற்றோரை வரவைத்து மாணவன் பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்ததை பெற்றவரிடம் தெரிவித்ததோடு மாணவனுக்கு போலீசார் அறிவுரை கூறினார்.
சென்னை நகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவன் பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்த சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.