நிலத்தகராறில் மூதாட்டியை சரமாரியாக கட்டையால் தாக்கிய நபர்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு எல்லாப்பிள்ளையார் வட்டம் பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் பெருமாள் இருவரும் அண்ணன் தம்பிகள்.

சின்னபிள்ளையின் மகளான செவத்தம்மாளுக்கும் பெருமாள் மகனான குமாருக்கும் இடையே 4 சென்ட் அளவிலான நில தகராறு பல வருடங்களாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் செவத்தம்மாள் பிரச்சனையில் உள்ள அந்த நாலு சென்ட் நிலத்தை ஏர் உழ டிராக்டரை அழைத்து வந்துள்ளார். அப்போது குமார் அந்த நான்கு சென்ட் நிலம் என் பெயரில் உள்ளது அதை முறையாக அளந்து கொடுத்துவிட்டு நிலத்தை ஓட்டுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து ஏற்பட்ட தகராறு கைகலப்பாத மாறியது. அப்போது செவத்தம்மாள் தரப்பில் தாக்கியதில் குமாரின் மனைவி விஜயா காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஆத்திரம் அடைந்த விஜயாவின் தம்பியான ரமேஷ் செவத்தம்மாளை கட்டையால் சரா மாறியாக தாக்கியுள்ளார்.

பின்னர் நிலைகுலைந்த செவத்தம்மாள் மயங்கி விழுந்தார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இவர்களை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் செவத்தம்மாளை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கும் விஜயாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News