திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடில் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனையும் கிட்டத்தட்ட முடிந்தது. தமிழகத்திற்கு மட்டும் இன்னும் துவங்கவே இல்லை.
மற்ற எய்ம்ஸ்.,க்கு 3000 கோடி பணம் ஒதுக்கி கட்டுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் கடன் வாங்கி கட்டுங்கள் என்கின்றனர்.
கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் அனைத்து குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.