காதலர்கள் என்றாலே ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்துக் கொள்வது வழக்கம்., அப்போ எல்லாம் காதலர்கள் தன்னுடைய காதலனுக்கோ அல்லது காதலிக்கோ பரிசு கொடுப்பதற்காக வீட்டில் 5, 10 திருடுவது வழக்கம்..
ஆனால் இப்போ உள்ள 2கே கிட்ஸ் காதலர்கள் எல்லாம் காஸ்லி கிப்ட் கொடுப்பதற்காகவே., வீட்டில் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.. அப்படி தான் இந்த காதலியும் தன்னுடைய காதலனுக்காக செய்ததும். அப்பெண்ணின் இச்செயல் மதுரவாயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயிலை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் படித்து வந்த நவீன் (பெயர் மாற்றம்) மாணவரை காதலித்துள்ளார். காதலிக்கும் போதே ஒருவருக்கொருவர் தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மட்டுமின்றி பொருட்களையும் பரிமாறி கொள்கின்றனர்..
இல்லை என்றால் தன்னுடைய காதலன் அல்லது காதலியின் ஆசையா நிறைவேற்ற துடிக்கிறார்கள்.. அப்படி இந்த காதலர்களுக்குள் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்., நவீன் தன்னுடைய காதலியிடம் தனக்கென்று ஒரு கார் வாங்க வேண்டுமென்று ஆசையாக உள்ளதாகவும்., அதற்கு பணம் இல்லாமல் தவிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட அந்த மாணவி காதல் மயக்கத்தில்., தன்னுடைய காதலன் ஆசையை நிறைவேற்ற வீட்டில் இருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை திருடி காதலனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட அந்த மாணவன்., கம்பி நீட்டியுள்ளார். பின்னர் காதலன் வெகுநாளாக துண்டிப்பில் இருந்த நிலையில் மாணவி நடந்தவற்றை வீட்டில் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்.. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்கேப் ஆன காதலனை தேடி வருகின்றனர்..