சென்னை புளியந்தோப்பு பகுதியில் நண்பர்களுடன் கோகுல் என்பவர் கடந்த சில நாட்களாக போதை ஊசி பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் நண்பர்களுடன் போதை ஊசி பயன்படுத்திய கோகுல் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவருடைய நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அப்பொழுது வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.