நோயாளியாக மருத்துவம் பார்க்க வந்து போலி மருத்துவரை பிடித்த முதன்மை மருத்துவ அலுவலர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பைரவன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜேந்திரன் (50) மருத்துவ படிப்பு படிக்காமல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பல வருடங்களாக அவருடைய வீட்டில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில் நாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த முதன்மை மருத்துவ அலுவலர் செல்வநாதன் தனக்கு உடல்நிலை சரியில்லாதது போல் அவருடைய வீட்டிற்குச் சென்று மருத்துவம் பார்த்துள்ளார்.

அப்போது ராகசியமாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பெயரில் விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரனை பிடித்தனர்.

மேலும் இந்த வீட்டிலிருந்து ஊசி, மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து முதன்மை மருத்துவ அலுவலர் செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் ராஜேந்திரன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் ஏற்கனவே ஒரு வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் இதேபோல் போலியாக மருத்துவம் பார்த்து வந்ததால் கைதானது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News