டெல்லி சலோ போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்தல், பயிர்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஷாம்பு எல்லையில் மீண்டும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி போலீசார் விரட்டினர்.