ரூ.100க்கு புற்றுநோய் தடுப்பு மாத்திரை.. டாடா ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!

இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.

இந்த மாத்திரை, நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும், அத்துடன் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்கவிளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரை கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் பயன் உள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES

Recent News