மீண்டும் அதிர்ச்சி..! திருநெல்வேலி தூத்துக்குடியில் தொடரும் கனமழை ..! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (டிச.27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (28ம் தேதி) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், 29 மற்றும் 30 தேதியும் புதுச்சோி மற்றும் காரைக்காலில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வருகிற 31 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
எனத் தொிவித்துள்ளனா்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ,ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்தொிவிக்கப்பட்டுள்ளது .இதனிடையில், வரும் 27 மற்றும் 28 ல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனா்.

RELATED ARTICLES

Recent News