தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்-ஷாலினி. இவர்கள் இருவருக்கும், கடந்த 2000-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அஜித் செய்ய தயங்கிய விஷயத்தை, ஷாலினி செய்துள்ளார். அதாவது, சமூக வலைதளங்களில், நடிகர் அஜித் கணக்குகள் எதுவும் தொடங்காமல் இருந்தார்.
ஆனால், தற்போது, அஜித்தின் புகைப்படங்கள், படம் தொடர்பான அப்டேட்களை வெளியிடுவதற்கு, நடிகை ஷாலினி, இன்ஸ்டாகிராமில், புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், தங்களது திருமண நாளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.