அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி என்று பல்வேறு சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை தீபா.
இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆன் குழந்தை பிறந்தது. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று, பிரிந்துவிட்டனர்.
இந்த பிரிவுக்கு பிறகு, தனியாக வாழ்ந்து வந்த தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்த சாய் கணேஷ் என்பவரை, காதலித்து வந்துள்ளார்.
ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமணம், சின்னத்திரை வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

