கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயதான பெண், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், 42 வயதான தொழில் அதிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்தனர்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து, இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். இதுமட்டுமின்றி, அந்த ஆசிரியையிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் வரை, தொழில் அதிபர் பெற்றிருக்கிறார்.
இறுதியில், திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று ஆசிரியை முடிவு எடுத்து, தொழில் அதிபரிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை ஒருவரை, தொழில் அதிபர் ஏமாற்றியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.