சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் காலமானார்!

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், வயது முதிர்வு காரணமாக இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.

வெளிநாடுகளில் படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த இவர், 1978 ஆம் ஆண்டு இந்த அமைப்பை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை வழங்கினார்.

இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ , டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இன்றும் இவரது சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News