கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் கடையின் ஷோகேசில் வைக்கப்பட்ட 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து, 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளயனை தேடி வருகின்றனர். மேலும் கடை ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை அவரது தாயாரிடம் இருந்து போலீசார் மீட்டனர். தொடர்ந்து, கொள்ளையன் விஜயகுமாரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.